Friday, April 24, 2015

முழுமை அடைய தவம் செய்..

மன்னன் கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றபோது களைப்பால் வசிஷ்ட முனிவரின் ஆசிரம் அடைந்தார். அங்கு இருந்த "நந்தினி" பசு மீது ஆசைப்பட்டு... பத்து கோடி பசுக்கள் தருகிறேன் எனக்கு இந்த நந்தினியை தா என்றார். வசிஷ்டர் ராஜ்யமே தந்தாலும் தரமாட்டேன் என்றார்.

கௌசிகன் சத்ரிய தர்மப்படி நான் இந்த பசுவை இழுத்து செல்வேன் என்றார். நந்தினி வசிஷ்டரிடம் மன்றாடியது... அதற்கு அவர்...

சத்ரியன் பலம் அவர் உடல் வலிமையாகும்.
பிராமணர் பலம் அவர் பொறுமை தான் என்றார்.

நந்தினி பசு கௌசிகனுடன் போக மறுத்தது... அதன் பாகங்களில் இருந்து பல போர் வீரர்கள் தோன்றினர்.. அவர்களுடனும் வசிஷ்டர் உடனும் கௌசிகன் போரிட்டு தோற்றார்.

"சத்ரிய பலம் பெயரளவிற்கே பலம்.... திக்காரம், பிராம்மதேஜச்சில் பிறக்கும் பலமே உண்மையான பலம்" என்று அறிந்தார்..

பின் தவம் செய்து...சித்தியடைந்து.... விஸ்வாமித்திரர் ஆனார்..
Moral: முழுமை அடைய தவம் செய்..

No comments:

Post a Comment