Thursday, May 9, 2013

யோகம், கரணம், அம்ருதாதி யோகம் பற்றி விளக்கம்

 யோகம், கரணம், அம்ருதாதி யோகம் பற்றி விளக்கம் 12 லக்னங்களில் பிறப்பவர்களின் யோக, போகங்களை கூறிய வராகமிகிரர், யோககாரகர்கள், சுபர்கள், பாபிகள், மாரகாதிபதிகள் என 12 ராசியில் பிறந்தவர்களுக்கும் கூறியுள்ளார். நவகிரகங்கள் ஒன்பது பேரும் தாயாதிபோல் தமக்குள் உறவுமுறையை அமையப் பெற்றவர்கள். இது ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? நீங்கள் கேட்கும் யோகங்கள், ஜாதக யோகம், அம்ருதாதி யோகம், 27 யோகங்கள் என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம். அம்ருத யோகம், சித்தயோகம் இவற்றில் சுபவிசேஷங்கள் நடத்தவும்.

மரண யோகம், பாபவாரிஷ்ட யோகம் மிகவும் கெடுதலை கொடுப்பதால் சுபங்களை விலக்க வேண்டும். பஞ்சாங்கம் என்றால் திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் ஐந்தையும் குறிக்கும் புத்தகமாகும். இதில் 27 யோகங்கள், 11 கரணங்கள் என்று பல விஷயங்கள் உள்ளன. சித்தயோகம், அதிகண்ட யோகம், ஆயுஷ்மான் யோகம், விஷ்கம்ப யோகம், சோபன யோகம், ஸௌபாக்ய யோகம், ஹர்ஹண யோகம் என்று வரும்போது சுப விஷயங்களைச் செய்யலாம்.

No comments:

Post a Comment