Thursday, May 9, 2013

ஒருவர் நள்ளிரவு 1:10க்கு இறந்து விடுகிறார். அவர் இறந்த நாளை முதல் நாளாக கணக்கிட வேண்டுமா? அல்லது மறுநாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?

ஒருவர் நள்ளிரவு 1:10க்கு இறந்து விடுகிறார். அவர் இறந்த நாளை முதல் நாளாக கணக்கிட வேண்டுமா? அல்லது மறுநாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
பல காரியங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்ட போதிலும் இன்றும் அனைத்து மதத்தவர்களும் மறைந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளை நிறுத்தவே இல்லாதது ஆறுதலான விஷயம். ஆங்கிலேயர்கள் நமக்கு கொடுத்த ரயில்வே நேரம் இரவு 12 வரை முதல் நாள் என்றும் பிறகு வருவதை மறுநாள் என்றும் கணக்கிடுகிறோம். ஆனால், இறப்பு-பிறப்பு இரண்டிற்கும் சூர்யோதயம் 6 மணி என் கிற கணக்கில் நடு இரவு 1:20 வரை ஒருநாளுக்கான காலத்தை வைத்துக் கொள்ளலாம் என தர்ம சாஸ்திர நூ ல்கள் கூறுகின்றன. சனிக்கிழமை நடு இரவு 12 மணிக்கு பிறந்த குழந்தை முதல் நாள் சனிக் கிழமையில் பிறந்ததாகக் கொள்ள வேண்டும். நம் ஆயுள் உள்ளவரை நினைவு நாள், திதி, மாதம் என்று அறிந்து அன்ன தானம், தர்ப்பணம் முதலியவற்றை செய்ய வேண்டும்

No comments:

Post a Comment