Monday, May 6, 2013

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொ ண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினா ர் அவர்.
அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசை யாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்ற து. கழியை எடுத்துக் கொண்டு பூனை யைத் துரத்தினார் அவர்.
மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்து க் கொன்றது. வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை, ஆத்திரமும் இல்லை
வேண்டாத எலியைக் கொன்ற போதுமகிழ்ச்சி.வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்;துக்கம்
.
வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக்குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை;துக்கமும் இல்லை.

அது மட்டுமல்ல……
பசிக்கு, தனக்கு வாய்த்த இரை எது வாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.
இந்த மன நிலை தான் யோகியின் சம நிலை.

No comments:

Post a Comment