Monday, May 6, 2013

வெறும் தரையில் படுக்கலாமா?

உறங்கும்போது உடலின் பாகங்கள் எப்படி அமைவது நல்லது?
ஆண்கள், பெண்கள் குப்புறப்படுத்து உறங்குவது உடலுக்குத் தீமை தரும்.

ஆண், பெண் இருபாலருக்கும் உடலின் வலது பாகம் மேல் பாகத்தில் இடது பாகம் கீழ் பாகத்தில் அமையும்படி உறங்க வேண்டும்.


வெறும் தரையில் படுக்கலாமா?
வீட்டில் உறங்கும்போது படுக்கை விரிப்பு இல்லாமல் தரையில் உறங்கக்கூடாது.

உடலுக்கு கேடுகள் உருவாகும்.


எத்திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?
கிழக்கு, தெற்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு நன்மை.

மேற்கு, வடக்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு தீமை
வீட்டில் வளர்க்கும் மரங்களின் நன்மை, தீமை எப்படி அமையும்?
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது வீட்டில் வறுமை, நோய் உருவாகும்.

தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது ஆண், பெண் இருபாலருக்கும் நன்மைகள் பல உருவாகும்.


வீடுகளின் அருகே காலி இட அமைப்பு நன்மை, தீமைகள் உருவாக வாய்ப்பு உள்ளதா?
கிழக்குப் பகுதியில் காலி இடம் இல்லாமல் மேற்கில் காலி இடம் விட்டு கிழக்கு முழுவதும் கட்டடம் அமைப்பது. (கிழக்கு பாரம்) ஆண் வாரிசுகளுக்கு முன்னேற்றத் தடை, வருமானத் தடை போன்ற இன்னல்களைத் தரும்.

வடக்குப் பகுதியில் இடம் இல்லாமல் தெற்கு காலி இடம் விட்டு வடக்கு முழுவதும் கட்டடம் அமைப்பது (வடக்கு பாரம்) பெண்களுக்கு இன்னல்களைத் தரும். தெற்குப் பகுதியில் காலி இடம் இல்லாமல் வடக்கு பகுதியில் காலி இடம் விட்டு கட்டடம் அமைப்பது (தெற்கு பாரம்) இதனால் பெண்களுக்கு நற்பலன்களைத் தரும்.

மேற்கு பகதியில் கட்டடம் அமைத்து கிழக்குப் பகுதியில் காலி இடம் விட்டு கட்டடம் அமைப்பு ஆண்களுக்கு நன்மை.



வீட்டின் தலைவாயிலை அலங்கரித்தல் அவசியமா?
வாரம் ஒருமுறை வீட்டின் தலைவாயிலில் மாவிலை தோரணம், வாசனை மலர்கள் தொடுப்பு அல்லது மாலை போல் அமைத்து மாட்டி வைக்க வேண்டும்

No comments:

Post a Comment