பணக்காரர் மருதாசலம் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன் மருதமுத்து,""ஐயா! ஏதாச்சும்
சாப்பிட இருந்தா போடுங்க!'' என்று கத்தினான். அவரோ பரம கஞ்சன்.
""ஏண்டா, காலங்காத்தால உசிரை வாங்குறே! போ...போ... இங்கே ஒண்ணுமில்லே!''
""சாமி...அப்படி சொல்லாதீங்க! கொஞ்சம் பழைய சோறாச்சும் போடுங்க!''
இதைக்கேட்டு அவரது மருமகள் செல்வி வெளியே வந்தாள்.
""தம்பி! நாங்களே இப்போது பழைய சோறு தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய சோறு தயாராகிக் கொண்டிருக்கிறது,'' என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். மருமகள் சமயோசிதமாக பதில் சொல்லி, பிச்சைக்காரனை அனுப்பி விட்டாள் என்று மாமனார் மருதாசலத்துக்கு ஏக ஆனந்தம்!
மருதமுத்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். கையில் இருந்த சிறு ரொட்டியை சாப்பிட்டபடியே, பணக்காரரின் மருமகள் அப்படி ஏன் சொன்னாள் என்பது பற்றி ஆய்வு செய்தான்.
""ஆம்...அவள் சொன்னது சரிதான்! அவளது மாமனார், முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் விளைவினால், தற்போது ஆனந்தமான வாழ்வை அனுபவிக்கிறார். வேளாவேளைக்கு அவருக்கு புத்தம் புது உணவு கிடைக்கிறது. ஆனால், இப்போது தனது கருமித்தனத்தால், அடுத்த பிறவிக்கு தீங்கான பலன்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த பலன்கள் அடுத்த பிறவியில் அவருக்கு பழைய சோற்றைத் தான் போடும். இதைத்தான் அந்தப் பெண் குறிப்பாக, இப்போதே பழைய சோற்றை சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என மறைமுகமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறாள்,'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
புரிகிறதா! நீ இப்போது சாப்பிடுவது எந்த உணவாயினும், அது நீ முன் ஆற்றிய செயல்களின் விளைவே என்பதை!

No comments:
Post a Comment