Wednesday, April 1, 2015

சாபவிபரங்கள்

சாபவிபரங்கள்
ஒருவர் பலவித சூழ்நிலையில் வம்சா வழியாக துன்பப்பட்டுக் கொண்டு இருப்பின் அவர் பிரேதசாபம், தேவதோஷம், ஸர்ப்பதோஷம், பித்ருதோஷம், அபிஷhர தோஷம், திருஷ;டி தோஷம் போன்ற சாபனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவரும், இதை அவரது ஜனன ஜாதக கிரஹ நிலை கொண்டு கண்டிப்பாக அறியலாம்.
1. பிரேத சாபம் : பிரேத சாபனை என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 88 அடி தீட்டு ஏற்படுகின்றது. இதை சிலர் பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜை செய்தல், தாம்பத்ய தொடர்பு கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உண்டாவதாகும். மேலும் பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்காக சண்டை போட்டுக்கொள்வது, பாகம் பிரிப்பது கடன் கொடுத்தோர் கடனை திருப்பி செலுத்த சொல்லுதல் இதன் மூலமும் இந்த சாபனை தொடரும்.
விளைவு : தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், மனதில் நிம்மதியே இருக்காது, எந்த வித காரியத்தையும் சுலபமாக முடிக்க முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும் புத்திரசோகம் கொடுக்கும், தேவையற்ற பொருள்நஷ;டம் கொடுக்கும், புத்தி ஒரு சமயம் போல் மறுசமயம் இருக்காது.
2. தேவதோஷம் : தேவதோஷம் என்பது வீட்டில் பரம்பரை பரம்பரையாக பூஜை படங்கள் அல்லது எந்திரங்கள் அல்லது விக்கிரஹங்கள் இவற்றை பூஜித்து விட்டு பிறகு இவைகளை பூஜை செய்யாமல் அலட்சியப்படுத்துவதால் வருவது.
விளைவு : எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்காது, செலவு, உற்றார் உறவினர் மூலம் செலவு, வம்பு, வழக்கு, பிரயாணத்தால் செலவு, மருத்துவத்தால் செலவு, உறவுகள் பகையாக மாறும், பக்கத்து வீட்டுக்காரரால் சதா பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். தாம்பத்தியத்தில் வெறுப்பு ஏற்படும்.
3. ஸர்ப்பதோஷம், நாகதோஷம் (பெண் சாபனை) : ஸர்ப்பதோஷம் என்பது பெண்களுக்கு இழைத்த அநீதியால் வருவது.
கன்னிப்பெண்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை மணப்பது. நண்பனது மனைவியை நிர்பந்தத்தால் பாழ் செய்வது. அதிகாரத்தால் பெண்ணை பணிய வைப்பது. மணமான பெண், விதவைபெண், வாழாமல் வீட்டில் இருக்கும் பெண் இந்த பெண்களிடம் நன்றாக வாழவைப்பேன் என்று உறுதி கூறி சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு நடுவீதியில் விட்டு விட்டு ஓடி விடுவது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை துவம்சம் செய்வது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்பி விடும் பெண்ணை மோசம் செய்வது. ஒன்றும் அறியாத சிறுமிகளை கெடுப்பது. முதல் மனைவி மனது நோக இரண்டாவது மனைவியை கொண்டு வருவது.
விளைவு : மனைவி கள்ள தொடர்பு வைத்து பல வித அவமானத்துக்கு உள்ளாக்குவாள். மனைவியிடத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை ஏற்படும் வீட்டில் நுழையவே பிடிக்காது. பெண் குழந்தைகள் தன் இஷ;டத்திற்கு நடந்து அவமானத்துக்கு உள்ளாக்குவார்கள். தாய், சதோதரியிடத்தில் மனவேற்றுமை உண்டாகி கொண்டே இருக்கும். கணவன் மனைவியிடத்து அன்யோன்யம் இருக்காது அதே சமயத்தில் பிளவும்; இருக்காது. மணவாழ்க்கையால் சொந்தத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும், கணவன் மனைவிக்கு அடிக்கடி உடல் பாதிப்பு இருக்கும். தொழில் விஷயமாக கணவன் மனைவிக்கிடையே அபிப்ராய பேதங்கள் உருவாகும், தொழில் நிமித்தமாக கணவன் மனைவி பிரிவு ஏற்படும். தன் மனைவி, சுகத்துக்கு தானே வேறு ஆள் கொண்டு வரும் நிலை ஏற்படும். அண்ணன் மனைவி, தம்பி மனைவி, மாமியார் மருமகன், மருமகள் மாமனார் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மனைவியிடத்தில் அனுதினமும் கோபம் தாபம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
4. பித்ரு தோஷம் : பித்ரு தோஷம் என்பது வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் விடுவது.
நன்றாக வளர்த்து எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்து வாழ வைத்த பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விடுவது, அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கென்று உயர்தர உணவும் பெற்றோர்களுக்கு என்று தரம்; குறைந்த உணவும் கொடுத்து ஹிம்சைக்கு உள்ளாக்குவது, பெரியோர்களை அலட்சியப்படுத்தி பணியாட்களாக கருதுவது, தனது பெற்றோர்களை பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவது, இயற்கை பாதிப்பில் இருந்து பெற்றவர்களை காப்பாற்றாமல் விடுவது, இறந்த பெற்றோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, அவர்களது உடமைகளை அலட்சியப்படுத்தி விற்பது, கொடுமை தாங்காமல் பெரியோர்கள் தற்கொலை செய்து கொள்வது இந்த செயல்கள் பித்ருதோஷத்தை கொடுக்கும்.
விளைவு : அடிக்கடி புத்தி மாறாட்டம் ஏற்படும், தன் இனத்தை விட்டு வேறு இனத்தில் பிறர் வெறுக்கும்படி திருமணம் நடக்கும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெரியோர்களது ஆதரவு கிடைக்காது, அடிக்கடி பெரியோரிடத்து திட்டு வாங்கிகொண்டே இருக்கும், ஒரு சமயம் நன்றாக பேசும், மறுமுறை பேசாது, தானே பேசும் சிரிக்கும், தலையை நமிர்த்திக் கொண்டே நடக்கும், கர்வம் பிடிக்கும், தேவையில்லாமல் பொருள் நஷ;டம் புத்திரசோகம் ஏற்படும், தலையில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை பகுதி சூடாக இருக்கும், டென்சன் வாழ்க்கை ஏற்படும், மனதை போட்டு குழப்பிக் கொண்டே வாழ வேண்டி வரும்.
5. அபிஷhர தோஷம் : அபிஷhர தோஷம் என்பது செய்வினை தோஷம் ஆகும். மாந்திரிகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை அழிவுக்கு கொண்டு செல்வது. தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடகாலம் பாதிக்கப்படுவர், யார் செய்தார்களோ அவர்கள் 98 வருடகால் பாதிக்கப்படுவர், இவர்களது வம்சா வழியும் முன்னேற்றம் அடையாது. ஆக யாரும் செய்வினை தோஷத்தில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பலர் கஷ;டப்படும் போது செய்வினை செய்துவிட்டார்களோ என்று அச்சப்படுவர் இது தேவையற்ற அச்சமே, செய்வினை ஏவலை வெகு சுலபமாக செய்துவிட முடியாது, ஊர் தெய்வ உத்திரவு, குல தெய்வ உத்திரவு, ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகள் இவற்றை அறிந்து தான் செய்வினை ஏவலில் ஈடுபடமுடியும்.
விளைவு : செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்பு கிடக்கும், உணவில் துர்நாற்றம் கிளம்பும், பசு மாடு இறக்கும், இரவில் கதவு தட்டப்படும், பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும், கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும், கற்கள் வீசப்படும், தீப விளக்கு எரியாது, இனம் புரியாத கொடூர நோய் உருவாகும், சேர்த்து வைத்த செல்வம் பாழாகும், மனநிம்மதி இருக்காது, பிழைக்க வழியின்றி மனம் பேதலிக்கும், தன்னிலை மறப்பார்கள், சிரிப்பார்கள், ஓடுவார்கள்.
6. திருஷ;டி தோஷம்; திருஷ;டி தோஷம்; என்பது தனது ஆசை நிறைவேறாமல் எவர் ஒருவர் இறக்கின்றாரோ அவர் ஆன்மா சாந்தி அடையாமல் தனது உறவினர்களையோ அல்லது அவரது கிரஹ நிலைகள் ஒட்டியவரையோ பற்றிக் கொள்வது
விளைவு : நல்ல ஆசைகளை கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆவலில் இருப்பவர்கள் திடீரென்று இறக்க நேரிடும் போது ஆன்மா சாந்தி அடையாமல் அந்த ஆசையை உயிருடன் இருக்கும் ஒருவர் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள். இதன் விளைவாக சிறிய வயதாக இருப்பவர்கள் பெரிய, பெரிய விசயங்களை சொல்வார்கள், எந்த கேள்வி கேட்டாலும் ஏற்கனவே பார்த்தது போல் சொல்வார்கள், நாம் அவர்களை பார்த்து வியப்பில் இருப்போம். இந்த நிலை அந்த சிறுவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இருக்கும் பிறகு மறைந்து விடும்.
கெட்ட ஆசைகள் உள்ளவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் மற்றவர்களை பிடித்துக் கொண்டால் பல தொல்லைகளை கொடுத்து விடுவார்கள். இதையே பேய்பிடித்தல் என்று சொல்வார்கள். இந்நிலை உள்ளவர்கள் படும் துன்பம் பெரும் துன்பமாக இருக்கும் தானே சிரித்தல், விழிகளை உருட்டுதல், உயிருடன் விலங்குகளை கடித்து இரத்தத்தை குடித்தல், ஓடுதல், பழையவர்களின் பெயரை சொல்லி கூப்பிட்டு திட்டுதல், அடித்தல் போன்ற வெறியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

No comments:

Post a Comment