Monday, April 6, 2015

அட பணமே!

ஒரு பெரியவருக்கு இரண்டு மகன்கள். அவர் தன் சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக எழுதி வைத்தார். இளைய மகன் கிடைத்த சொத்தை ஒன்றுக்கு பத்தாகப் பெருக்கினான். ஏழைகளுக்கு உதவுவது போன்ற தர்ம காரியங்களையும் செய்தான். மூத்தவன் இவனுக்கு நேர் எதிர். உலகத்திலுள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும் அவனை ஆட்கொண்டன. அவனிடமிருந்த பணத்தை அனுபவிக்க காக்கா கூட்டம் மாதிரி நண்பர்கள் பலரும் வட்டமடித்தனர். அறிவே இல்லாத அவனை "உன்னிலும் சிறந்த அறிவாளி உலகில் இல்லை' என்று புகழ்ந்தனர். காலப்போக்கில் சொத்து கரைந்தது. சுற்றிலும் இருந்த காக்கா கூட்டம் அவனை இகழ ஆரம்பித்து விட்டது.
"அடேய்! உன் தம்பி உன்னை விட பத்து வயசு இளையவன். உன் அப்பா கொடுத்த சொத்தை பல மடங்கு பெருக்கிவிட்டான். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், அவன் நம்ம ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டி ஏழைப்பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறான். நீயும் இருக்கிறியே! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருந்தா இப்படி சொத்துக்களை இழந்து நடுரோட்டுக்கு வந்திருப்பாயா?' என்று கேலி செய்தனர்.
அவன் அழுதான். கெட்ட பழக்கங்களால் நோயும் துரத்தியது. சாகும் நிலையில் சாலையில் கிடந்த அவன், தம்பியின் கண்ணில் பட்டான். அந்த நல்ல தம்பி, அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து குணமாக்கினான்.
"அண்ணா! இனிமேலும் தீயவர்களுடன் சேர்ந்து அழியாதே. அப்பா கொடுத்த சொத்தைப் போல பத்துமடங்கு வைத்திருக்கிறேன். அதில் ஒரு பங்கை உனக்குத் தருகிறேன். இனியாவது திருந்து,'' என்றான்.
அவனும் முன்னேற்றப் பாதையில் சென்றான்.

No comments:

Post a Comment