Wednesday, April 22, 2015

அமிர்தம் உண்ணல

மதி மண்டலம் இடது திருவடியுடன் தொடர்பு மூளையின் நடுப்பகுதியில் இருக்கிறது . இதைச் செயல்படாது உட்செலுத்திய வாயுவும் அக்னியும் மழையைப் பொழிவிப்பது போன்று மூளை மண்டலத்தில் வேதியலை செய்விக்கும். இதனால் மதி மண்டலம் வெதும்பி அமிர்தம் பொழியும் அதை உண்டு பசி, தாகம் இன்றி இருக்கலாம்.

ஏமமாக்குதல்:


திருவருள் சுதந்திரம் ஆக்குதல் என்றால் உடல் முதலியவைகளை வெறுத்தல் அன்று. அனைத்தும் நம் தேவையை அறிந்து திருவருளால் வழங்கப் பெற்றவைகளே. ஆவைகள் அவனுடையவை. இந்த உடல் இறைவன் கருனையால் கொடுத்தவை. என்ற நினைவானது நம் உள்ளத்தில் பெருகினால் நம் உடல் முதலியன திருவருள் மயமாகிவிடும். இறைவனின் கருனையை சதா சிந்தித்திருத்தல் என்பதே இது. இதனை
'சத்'விகாரம் என்பர் இதன் பயன் ஏம சித்தி. ஏமாமாக்குதல் என்பதன் விளக்கம் ஆன்மாவை இயற்கையாக உள்ள குற்றத்தினால் ஆணவத்தினால் இந்திரியம், கரணம்,ஜீவன் ஆகியவைகளை தன்னுடையன, தற்சுதந்திரமுடையன என நினைத்தலை மாற்றி திருவருட் சுதந்திரமாக்குதல் என்பதே ஏமசித்தி யாக்குதல் ஆகும்.
சிவ அனுபவ ஞானமானது:


அது மனோலயம் அன்று யோக சித்தியன்று சுமாதி அன்று அது பிரம்ம பிரம்மம் ஒன்றேயாக விளங்குவது. இன்றையநிலையில் நாங்கள் கண்டதும், ஆராய்ச்சி செய்தது வெறும் பிரணாயாமம் என்ற பெயரால் முச்சுப் பயிற்சிகளும், ஆசனப் பயிற்சிகளும், குறியீடு இன்னதென்று அறியாத இடத்தில் மனதை வைக்கப் பழகுவதும் தான் எல்லா
யோகா சிரியர்களாலும் போதிக்கப்படுகிறது!. ஆனால் எம் குருநாதர் போதிப்பது முழுவதும் ஞானபாதம். ஆசிரியரின் தொட்டு காட்டுதலால் விளங்கி; கொள்ளமுடியும் வெளியில் விமர்சனப் படுத்த முடியாத ஒன்று

No comments:

Post a Comment