Sunday, April 5, 2015

கோலங்கள் போடும் ரகசியங்கள்

கோலங்கள் போடும் ரகசியங்கள்
images (1)
கோலம் போடுதல் வாசலுக்கு மட்டும் அழகைத் தருவதில்லை. போடும் நமக்கும் அது அழகைத் தருகிறது. விரல்களினால் கோல மாவை எடுத்து வளைத்து வளைத்துப் போடும்போது அது  நம் கை விரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது
images (4)
. குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு யோகப்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது

. மனித மனத்தை குரங்குடன் ஒப்பிடுவார்கள். அப்படி நம் தினசரி சூழலால் சஞ்சலமாகும் மனமும் கூட கோலம் போடும்போது ஒருமுகப்படும்.
images

நமது கற்பனைத் திறனையும் கிரியேட்டிவிட்டியையும் வளர்க்கிறது. கோலம் போடுவதால் நமது நினைவாற்றல் பெருகுகிறது. அழகாக கோலம் போடுபவர்களின் கையெழுத்து பார்க்க தெளிவாக அழகாக இருக்கும்
இது ஆன்மிக பலன்….
கோலம் தீய மற்றும் துஷ்ட சக்திகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும். லக்ஷ்மி தேவியை நம் வீட்டிற்கு வரவழைக்கும் ஒரு வழிமுறை இது.

கோலம் போடுவதால் மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும். அரிசி மாவைக் கொண்டு கோலம் போடும் போது அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும் சுற்றிலும் இடும் செம்மையான காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும்.

கோலத்தின் நடுவில் சாணம் வைத்துப் பூசணிப்பூ வைக்கும்போது மகாலஷ்மி மனம் மகிழ்ந்து வருவாள். அவளுடன் மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து நம்மை ஆசீர்வதிப்பார். கோலம் போடுவதால் வீடு மங்களகரமாகக் காட்சி அளிக்கும். தினசரி கோலம் போடும்போது வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு குறைவே ஏற்படாது.
 

No comments:

Post a Comment