Thursday, April 9, 2015

கோயில் அர்ச்சனை முறை

---  

நாம் கோயிலில் அர்ச்சனை செய்யும் முறையை பார்ப்போம். நாம் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் பொழுது நம் பெயரை முதலில் சொல்லி பின்பு நாம் பிறந்த நஷத்திரத்தின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்வது தானே வழக்கம். 

நஷத்திரமே முதலில் தோன்றியது. நாம் பின்பு தோன்றியவர்கள். பிறப்பின் வரிசையிலேதான் நாம் இங்கு சொல்ல வேண்டும். நாம் பிறந்த நஷத்திரத்தின் பெயரை சொல்லி பின்பு நம் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஒரு சம்பவ நிகழ்ச்சி. 

ஒரு முறை திருச்சியை சேர்ந்த சுந்தரராமன் என்பவர் காஞ்சி மகாபெரியவரை பார்க்க சென்று தன்னை திருச்சியில் இருந்து வரும் சுந்தரராமன் என்கிறார். அதற்கு பெரியவர் இன்னொரு முறை இன்னொரு முறை நாங்கு ஐந்து முறை கேட்க, அப்பொழுது தான் அவருக்கு புரிந்தது தன்னுடைய தந்தையின் பெயரை சொல்லவில்லை என்று உணர்ந்து திருச்சியில் இருந்து இன்னாருடைய சாஸ்திரிகளின் மகனான சுந்தரராமன் வந்திருக்கிறேன் என்கிறார்.



இப்படி, பெரியவர்களிடமும், குருமார்களிடமும், கடவுளிடமும் தன்னை அறிமுகபடுத்தும் போது தன் தந்தையின் பெயரை சொல்லி அறிமுகபடுத்துவது அவசியம். நாமொன்றும் தனி மனிதர்கள் கிடையாது. இந்த உலகில் நம் முதல் அடையாளமே நம்முடைய பெற்றோர்கள் தான். எனவே தான் இன்னாருடைய பிள்ளை என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

சரி கடவுளை தொழும் பொழுது இப்படி சொன்னால் போதுமா. இது மட்டுமா நமக்கு அடையாளம்?

அனைவருக்கும் நாம் எந்த குலம் என்று தெரியும். அதற்கு அடுத்து வருவது கோத்திரம். இவை இரண்டையும் சேர்த்து சொல்வது சிறப்பாகும்.

கொங்கு வெள்ளாளர்கள் அனைவரும் கங்கா குலம். அடுத்து, கூட்டம் என்பதும் கோத்திரம் என்பதும் இரண்டும் ஒன்றுதான். நாம் எந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவையனைத்தையும் சேர்த்து கூறும்பொழுது, நாம் நம் பெரியவர்களிடம் வைத்திருக்கும் மரியாதையையும் அவர்களுக்கு உண்டான இடத்தையும் நாம் முக்கியமான தருணங்களில் தருகிறோம் என்று அர்த்தம்.

உதாரணமாக, கங்கா குலம், பயிரன் கோத்திரம் (அ) கூட்டம், கந்தசாமியின் மகன் விசாகம் நஷத்திரத்தில் பிறந்த முருகேசன் என்று கோயிலில் உள்ள கோயில் குருக்களிடம் சொல்லி ஆண்டவனிடம் அர்ச்சனை செய்வது பூரண முறையாகும்.

சரி, இப்படி சொல்லுவது சாத்தியமா? ஐயர் எத்தனை பேருக்கு இப்படி சொல்லுவார் என்று நினைக்கச் சொல்லும்.

நம்ம ஐயன் பாட்டன் எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் அர்ச்சனை செஞ்சாங்ன்னா கிடையாது. 

அன்றைக்கு நம்ம பெரியவங்க எல்லாம் பங்காளிகளோட சேர்ந்துதான் கோயிலுக்கு போவார்கள். குலகுரு சாமியார் அவங்க அவங்க ஊருக்கு சஞ்சாரம் வரும்பொழுது பங்காளிகள் அனைவரும் ஒன்றோடுதான் சாமி கும்பிடுவார்கள். அப்பொழுதெல்லாம், அங்கிருக்கும் குடும்பங்களில் இருக்கும் பெரியவர் ஒருவரின் பெயரில் தான் அர்ச்சனை செய்வார்கள். இப்படியாக, இந்த குலம், இந்த கோத்திரம், இந்த நஷத்திரத்தை சேர்ந்த நானும் எனது பங்காளிகள் குடும்பமும் என்கிற பெயரில் தான் அர்ச்சனை செய்வார்கள். பொதுவாக அனைவருக்கும் ஒரே அர்ச்சனைதான்.

சரி, இப்ப ஒரு சந்தேகம் உங்களுக்கு வரும். பங்காளிகள் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு அர்ச்சனையா? அப்படின்னா, சாமி எப்படி அத்தனை பேருக்கும் வேண்டியதை கொடுக்கும். 

அர்ச்சனை என்பது கடவுளிடம் நமக்கு வேண்டியதை பெறுவதற்காக நினைத்து இப்பொழுது எந்த கோயிலுக்கு சென்றாலும் அர்ச்சனை செய்து வருகிறோமா.

அப்படியல்ல கதை. 

மேலே சொன்னவாறு நம்மை இன்னாரென்று கடவுள் முன் அறிமுகப்படுத்தி உன்னை மனதார வணங்குகிறேன் என்றுதான் பொருள். மாறாக எனக்கு இதைக்கொடு அதைக்கொடு என்பதற்காக அல்ல.

இப்ப சொல்லுங்க, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக அர்ச்சனை வேண்டுமா இல்லை குடும்பத்துக்கு ஒரே ஒரு அர்ச்சனை போதுமா?

இன்னும் சில பேர், கோயிலுக்கு போய் பெருந்தன்மையாக் சுவாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்வார்கள். உதாரணத்திற்கு, ஒருவர் அகதீஸ்வரர் கோயிலுக்கு போய் சுவாமியாகிய அகத்தீஸ்வருக்கு அர்ச்சனை செய்வதற்கு என்ன அர்த்தம் என்றால், அகத்தீஸ்வரராகிய நான் அகத்தீஸ்வரரை வணங்குகின்றேன் என்பதாகும். சிரிக்காதீர்கள்,
நாம் இப்படித்தான் தவறு செய்கிறோம். சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்தல் கூடாது.

நலமே விழைக...

No comments:

Post a Comment