Monday, April 20, 2015

துளசி மணி மாலை ஏன் அணிய வேண்டும்!

துளசி மணி மாலை ஏன் அணிய வேண்டும்!
ஐயப்ப தரிசனத்துக்கான ஆரம்பம், துளசி மாலை அணிவதில்தான் தொடங்குகிறது. சபரி மலைக்குச் செல்ல விரதமிருப்பதை மற்றவர்கள் தெரிந் துகொள்வதற்கான அடையாளம் இது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு ஐதிகமும் உண்டு. ஹரிஹர சுதனுக்கு தாய் ஸ்தானத்தை வகிப்பவர், மோகினி அவதாரம் எடுத்த மகா விஷ்ணு. திருமாலின் மார்பில் நீங்காத வாசம் செய்பவள் மகாலட்சுமி. அந்தத் திருமகள் துளசியில் நிரந்தர வாசம் செய்வதாகச் சொல்கின்றன புராணங்கள். துளசிமாலை அணிவதால், மகாலட்சுமி கடாட்சம் சேரும். இது, மெய்ஞான தத்துவம். இன்னொரு வகையில் பார்த்தால், துளசி, வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. குளிர்காலத்தில் தினமும் இருவேளை நீராடும் பக்தர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு எதுவும் வந்துவிடாமல் தவிர்ப்பதற்காகவே, துளசிமாலை அணிவது நம் முன்னோர்களால் நியதியாக ஏற்படுத்தப்பட்டிரு க்கிறது.
துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment