Monday, April 6, 2015

கணவருக்காக

அரச குடும்பத்துடன் நட்பு கொண்ட ஜெயதேவர்-பத்மாவதி தம்பதிக்கு ஊருக்குள் பெரும் செல்வாக்கு இருந்தது. ஜெயதேவர் மன்னருடன் வேட்டைக்குச் செல்லும் நாட்களில் பத்மாவதி, ராணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். ஒருநாள் பத்மாவதி ராணியிடம் கற்பு பற்றி பேச நேர்ந்தது. அப்போது, ""கணவர் இறந்த பின்னும் ஒரு பெண் உயிர் தரித்திருப்பது கூடாது. கற்புக் கனலாக வாழ்வது தான் உயர்ந்தது,'' என்று சொன்னாள். இதற்கு ராணி பதிலேதும் சொல்லவில்லை. பத்மாவதியை சோதித்துப் பார்க்க விரும்பினாள்.
ஒருநாள் வேட்டைக்குப் போன மன்னரும், ஜெயதேவரும் நெடுநேரமாகியும் திரும்பவில்லை. இது தான் சமயம் என கருதிய ராணி பரபரப்புடன், ""பத்மாவதி! உன் கணவர் ஜெயதேவரை வனத்தில் சிங்கம் கொன்று விட்டதாம்! இப்போது தான் செய்தி கிடைத்தது'' என்று அழுது கொண்டே கூறினாள்.
பத்மாவதி நிலை குலைந்தாள், "கிருஷ்ணா! கிருஷ்ணா!' என்றபடியே கீழே விழுந்து உயிர் விட்டாள்.
விளையாட்டு வினையாக முடிந்ததை எண்ணிய ராணி அழுதாள்.
சிறிது நேரத்தில் ஜெயதேவரும், மன்னரும் அரண்மனை திரும்பினர்.
ராணி நடந்ததை மறைக்காமல் சொல்லி வருந்தினாள். செய்வதறியாத ஜெயதேவர் கிருஷ்ணரைச் சரணடைந்து வழிபட்டார். கிருஷ்ணனின் அருளால் பத்மாவதி உயிர் பெற்றாள். அவளது கற்புத்திறன் கண்டு ஊரே வியந்தது. 

No comments:

Post a Comment