Friday, April 24, 2015

அதிகமாக விவாதிக்காமலும், வாதம் செய்யாமலும் இருப்பதும் நல்லதாகும்

பொறாமை உணர்வு கொண்டவர்களுடனும், முன் கோபிகளிடமும். கர்வம் உள்ளவர்களிடமும் அதிகமாக விவாதிக்காமலும், வாதம் செய்யாமலும் இருப்பதும் நல்லதாகும். மன அமைதியே எல்லாவற்றினும் முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டால் கோபம் கட்டுப்படும்! நியாயமான கோபமும் இருக்கத்தான் செய்கிறது. அநீதிக்கு எதிரான கோபம் தேவையானது. கோபம் உள்ளிட்ட உணர்வுகளுக்கு சிந்திக்க துவங்குவதுதான் வெளியே வர சரியான வழி. சிந்திப்பது மூலம் நம்மையும் பிறரையும் பாதிக்காமல் காத்துக்கொள்வது சாத்தியம்தான். மனிதர்கள் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது. எனவே சிந்திப்பதால் கோபத்தினின்று மதினுட்பட்மாக தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment