Sunday, April 5, 2015

சமயச்சின்னம்

சமயச்சின்னம்

நம் இந்து மதத்துக்கே உள்ள தனிப்பெரும் அடையாளம் நெற்றியில் பொட்டு வைப்பது. நெற்றித் துடிப்பின் முக்கிய அம்சம் ஆக்ஞா சக்கரம். அப்பகுதியை பாதுகாக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் நெற்றியில் பொட்டு வைப்பது மிகவும் அவசியம், அக்காலத்தில் பள்ளிக் கூட்டு பிரார்த்தனையின் போதோ அல்லது தினசரி வகுப்பிலேயோ மாணவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் சந்தனம் நாமம் இவற்றில் ஏதாவது ஒன்று  வைத்துக்கொள்ளாவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.
இதை வலியுறுத்தியே திரு ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு  வானவர் மேலது நீறு என்று குறிப்பிட்டார் ,  மேலும் திரு நீற்றில் என்னிடம் திகழும் சக்தியே என்றும் நீறில்லா  நெற்றிப் பாழ் என்றும் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். பசுஞ்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி. கன்று ஈன்ற பசுவிடமிருந்து அஷ்டமி  பௌர்ணமி திதிகளில் பசுஞ்சாணத்தை தாமரை இலையில் வாங்கி நீர்  பால்  தயிர் கோமியம் நெய் சேர்த்து உருண்டைகளாக்கி அவற்றை எரித்து விபூதி தயாரிக்கப்படுகிறது.  நீர் கோர்த்து பாரமாய் இருப்பின் அதை ஈர்க்கும் தன்மை விபூதிக்கு உண்டு.download (2)
நாமக்கட்டி உடல் சூட்டைத் தணிக்கவல்லது. சந்தனம் கோபத்தைக் கட்டுப்படுத்தி சாந்தம் அளீக்கக்கூடியது.
மஞ்சள் பூசி குங்குமப்பொட்டு வைத்து பூச்சூட்டிக்கொள்வது தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய பண்பாட்டு முறை. குங்குமம் சுமங்கலித்துவத்தின் அடையாளம்  நெற்றிப்பொட்டு இயற்கையான முக அழகை மேலும் அழகு படுத்துகிறது.  சுத்தமான மஞ்சளினால் தயாரிக்கப்பட்ட குங்குமம் தெய்வ சிந்தனையைத் தருகிறது. குங்குமம் ஒரு சின்னஞ்சிறிய ஒளி வட்டம். தெய்வத்தின் அருளாணைகளை  நெஞ்சில் நிறுத்த நேர்வழியில் நடக்க நம்மைத் தூண்டுகிறது.
பெண்கள் மூன்று இடங்களில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்  அவை   நெற்றிப்பொட்டு  முன் வகிடு  மாங்கல்யம்
வகிட்டில் பொட்டு இட்டுக் கொள்வதன் சிறப்பை சீதையே சொல்வதாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.
அறிவியல் உண்மைகள்
இரு புருவங்களுக்கு இடையே உள்ள முக்கிய நரம்போட்டத்தில் குங்குமப்பொட்டு வைக்கப்படுவதால் வெப்பம் தணிகிறது. கண்கள் குளிர்ச்சியடைகின்றன. நரம்புகள் வழியாக மருத்துவப் பயன்கள் ஊடுருவி முக அழகு மேம்படுகிறது. உடல் ஆரோக்கியம் அடைகிறது. புருவ நடுவில் பொட்டு வைத்திருப்பவரை ஹிப்னாட்டிசம் முறையில் வசியம் செய்ய இயலாது.  நம் மதப் பண்பாட்டைக் காக்கும் விதமாக சமயச் சின்னங்களை நெற்றியில் தரித்து வளமும் நலமும் பெற்று உயர்வோம்.
 

No comments:

Post a Comment