Sunday, April 5, 2015

குளியலுக்கு விதிமுறைகள்

குளியலுக்கு விதிமுறைகள்
download (3)
குளியலுக்கு பல விதிமுறைகள் உண்டு. இரவு நேரத்தில் அதாவது இரவு ஒன்பது மணி முதல் விடிகாலை மூன்று மணி வரையுள்ள அகால நேரத்தில்  காரணமில்லாமல் ஸ்நானம் செய்யக்கூடாது என்பதும் ஒன்று.
இந்த அகால நேரத்தில் குளம் நதி கிணறு போன்ற நீர் நிலைகளிலுள்ள ஜலத்தில் சூரியனின் வெப்பம் இருக்காது. ஜலத்திலுள்ள குளிர்ச்சியுடன் சந்திர கிரணங்களின் குளுமையும் சேர்ந்திருக்கும். ஆகவே இரவு நேரத்தில் நீர் நிலைகளிலுள்ள ஜலமானது அநேகமாக பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. ஆரோக்கியத்தைத் தராது என்பதால்தான் இந்தக் கட்டுப்பாடு. ஒருசில சந்தர்ப்பங்களில் இந்த விதிக்கு விதிவிலக்கு உண்டு.
அதாவது ஸ்நானம் செய்யக்கூடாத காலங்களிலும் ஸ்நானம்  செய்யலாம். இரவு நேரத்தில் சந்திர கிரகணம் நிகழும்போது அப்போது இரவு எந்த  நேரமானாலும் நதிகள் குளங்கள் ஏரிகல் கிணறு போன்றவற்றில் தாராளமாக ஸ்நானம் செய்யலாம். மேலும் இறந்தவுக்காக முதல் நாள் செய்ய வேண்டிய கர்மாவை முடித்துவிட்டு செய்யப்படும் ஸ்நானத்தையும் நீர் நிலைகளில் இரவில் எந்த நேரமானாலும் செய்யலாம். அவ்வாறே திருப்பதி குருவாயூர் போன்ற திவ்ய க்ஷேத்திரங்களிலும் அங்கிருக்கும் தேவதா தரிசனமே முக்கியமான குறிக்கோள் என்பதாலும் ஸ்நானம் செய்யாமல் ஆலயத்தில் தரிசனம் செய்யக்கூடாது என்பதாலும் அப்போது அந்தந்த க்ஷேத்ர மஹிமையை பிரமாணமாகக் கொண்டு இரவில் சூரியன் மறைந்த பின்னரும் அதாவது இரவு நேரங்களிலும் ஸ்நானம் செய்யலாம். இது சாஸ்திரப்படி சரிதான். தவறேதும் இல்லை  ஆனாலும் இரவு நேரத்தில் ஸ்நானம் செய்யும்போது ஏதாவது ஒரு தீபத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு அந்த தீபத்தின் ஒளியுடன் தான் ஸ்நானம் செய்ய வேண்டும் தீபம் இல்லாத நீர் நிலைகளில் இரவானாலும் அது புண்ணிய க்ஷேத்ரமானாலும் கூட ஸ் நானம் செய்யக்கூடாது என்னும் சாஸ்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment