Wednesday, April 1, 2015

வால்மீகி, துளசிதாசர் போன்றவர்கள் இளமையில் தவறு செய்தாலும், பின்னாளில் ஞானியாகி விட்டார்கள். தற்காலத்தில் ஏன் அப்படி நடப்பதில்லை?

வால்மீகி, துளசிதாசர் போன்றவர்கள் இளமையில் தவறு செய்தாலும், பின்னாளில் ஞானியாகி விட்டார்கள். தற்காலத்தில் ஏன் அப்படி நடப்பதில்லை?
இளமையில் தவறு செய்த பலர் மனமாற்றம் அடைந்து உயர்ந்த நிலைக்குச் செல்வது இன்றும் நடந்து தான் வருகிறது. நாத்திகர்களாக இருந்த பலர் ஆத்திகர்களாக மாறுவதும், தீயவழியில் வாழ்ந்தவர்கள் நல்லவர்களாக மாறி கோயிலே கதி என கிடப்பதையும் காண முடிகிறது. இளமையில் ஞானி வேடம் பூண்டவர்கள் பின்னாளில் தவறு செய்து கீழ்நிலைக்குத் தள்ளப்படவும் செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் திருந்தி ஞானியாக வலம் வர எவ்வளவு முயன்றாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. வால்மீகி, துளசிதாசர் போன்றவர்கள் கீழேயிருந்து மேலே வந்தவர்கள். நீங்கள் கேட்டிருப்பதைப் போல உள்ள ஞானிகள் மேலேயிருந்து கீழே வந்தவர்கள். அவ்வளவு தான்.

No comments:

Post a Comment