Sunday, April 5, 2015

 நாய் பற்றி சில செய்திகள்
Chinese Shar-Pei
ஷர்பி என்று ஒரு நாய் வகை சீனாவில் உள்ளது. இந்த வேட்டை நாயின் உடல் வேட்டையாடும்போது விறைத்துக்கொண்டும் சாதாரண நேரங்களில் மடிப்பு மடிப்பாக சதை தொங்கும்படியாகவும் இருக்கும்.download
ஜெர்மனியின் டாபர்மேன் வகை நாய்கள் உலகப் புகழ் பெற்றவை.
நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டொ ரோசா என்ற இடத்தில் இயங்கி வருகிறது.
மனிதர்களைவிடப் பத்து மடங்கு அதிக கேட்கும் சக்தியும் மோப்ப சக்தியும் நாய்களூக்கு உண்டு.
நாய் ஓநாய் இனத்திலிருந்து வந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்download (5)
உலகம் முழுவதும் உள்ள வேட்டை நாய்கள் மணிக்கு 35.5 மைல் வேகத்தில் ஓடக்கூடியவை.
நாய்கள் ஒரே  நேரத்தில் இரண்டு கண்களாலும் வேறு வேறு பொருட்களைப் பார்க்கும் ஆற்றல் பெற்றவை.
நாய்களின் வாழ் நாள் பதினைந்து ஆண்டுகள்download (2)
பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கும் மேலாக நாய்களை நேசிக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வளர்க்கும் நாய்கள் இறந்துவிட்டால் அவைகளுக்காகத் தனியே கல்லறைகள் கட்டி நினைவுகூர்கிறார்கள்.
நாய்களுக்கான பொது கழிப்பிடங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் பாரீஸ் நகர மக்கள்.download (1)
ஜப்பானியர்கள் நாய்களுக்கென்றே தனி உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.
பிரிட்டிஷ் மக்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்புச் செலவைவிட நாய்களுக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.download (4)
ஸ்விட்சர்லாந்து நாட்டில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன.
ஜப்பானில் நாய்களுக்குக் கூட வங்கிகளில் தனி சேமிப்புக் கணக்குகள் உள்ளன.
இந்தோசீன மக்களின் நம்பிக்கை கொஞ்சம் வித்தியாசமானது. அங்குள்ள மோய்கள் எனப்படும் மலைவாசிகள் நாய்களைத் தங்கள் முன்னோர்களாக எண்ணி வழிபடுகின்றனர்.alano-spain
ஐரோப்பியர்கள் தங்கள் வளர்ப்புச் செல்வங்களை வெளியே அழைத்துச் செல்ல தனியாகக் கார்கள் வைத்திருக்கிறார்கள்.
நம் நாட்டில் நாய்களுக்குக் காப்பகங்கள் உள்ளன.download (3)
தங்களது காவல் தெய்வமாக கிரேக்கர்கள் நாய்களை கருதினார்கள்.
நில நடுக்கம் ஏற்படுவதை நாய்களின் போக்கைக் கண்டு அறியலாம். நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் நாய்கள் காரணமின்றிக் குரைத்துக்கொண்டே இருக்கும்.
 

No comments:

Post a Comment