Monday, August 24, 2015

இரண்டு வரம் வேண்டும்!

நீண்டகாலம் சொர்க்கத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு சலித்துப் போனது. அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்தான். வழியில், நரகத்தில் இருந்து தப்பிய இன்னொருவனை சந்தித்தான். இருவரும் நண்பர்களாக மாறினர். 
""நண்பனே! நரகம் எப்படி இருந்தது?'' என்றான் சொர்க்கவாசி. 
""சித்திரவதை தாங்க முடியலே! நரகத்தைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? உன் சொர்க்க அனுபவம் பற்றிச் சொல் கேட்கிறேன்'' என்றான் நரகவாசி.
"" எப்போதும் கொண்டாட்டம், கும்மாளம் என்றே இருந்ததால் வாழ்க்கை சலித்து விட்டது. அதனால், அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்'' என்றான்.
இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது. 
யாருக்கும் தெரியாமல் இருவரும் இடம் மாறிக் கொள்ள முடிவெடுத்தனர். அதன் படி சொர்க்கவாசி நரகத்திற்கும், நரகவாசி சொர்க்கத்திற்கும் கிளம்பினர்.
ஆரம்பத்தில் இனிமையாகத் தோன்றினாலும், நாளடைவில் இருவருக்கும் மனதில் வெறுமை ஏற்படத் தொடங்கியது. 
மீண்டும் இருவருக்கும் அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் தோன்ற ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
""இன்ப மயமான சொர்க்கமோ, துன்ப மயமான நரகமோ வேண்டாம். வாழ்வில் இன்ப, துன்பம் இரண்டும் இருந்தால் தான் வாழ்வு ருசிக்கும். அதற்காக, கடவுளின் உதவியை நாடுவோம் '' என முடிவெடுத்தனர்.
அதன்படி, கடவுளிடம் இன்ப துன்பம் இரண்டையும் வரமாகப் பெற்று பூலோகத்தில் மனிதர்களாக வாழத் தொடங்கினர். 

No comments:

Post a Comment