Wednesday, August 26, 2015

மூணே மூணு வார்த்தை

ஏழைச் சிறுவன் ஒருவன், கடைக்காரரிடம் கை நீட்டி,""ஐயா! ஒரு ரூபாய் கொடுங்கள்... பசிக்கிறது,'' என்றான்.
அவர், "நான் ஐந்து ரூபாய் தந்தால் என்ன செய்வாய்?''
"ரொட்டி வாங்கி சாப்பிடுவேன்...''
"சரி...பத்து ரூபாய் கொடுத்தால்...'' எனக் கேட்க பையனுக்கு எரிச்சல் வந்தது. ஒரு ரூபாய் கேட்டால், கொடுக்க வேண்டியது தானே... ஏன் இத்தனை கேள்வி கேட்கிறார்...
இருப்பினும் பதில் சொன்னான்.
"என் அம்மாவுக்கும் ஒரு ரொட்டி வாங்கிச் செல்வேன்...''
கடைக்காரர் விடவில்லை. 
"நூறு ரூபாய் தந்தால் என்ன செய்வாய்?''
பையன் டென்ஷன் ஆகி விட்டான். தன்னை அவர் கேலி செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு, ஒரு முறைப்புடன் கிளம்பினான்.
கடைக்காரர் அவன் சட்டையைப் பிடித்து நிறுத்தி, "பதில் சொல்லிட்டு போ...'' என்றார்.
"உம்....உங்களை மாதிரி வியாபாரி ஆகிடுவேன்,'' என்றான்.
கடைக்காரர் அவனிடம் நூறு ரூபாயை நீட்டினார். சம்பவம் நடந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. ஒருநாள் கடைக்காரர் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தார். ஒரு இளைஞன் ஓடி வந்து அவரது பாதங்களில் விழுந்தான்.
"நீ யாரப்பா?'' என்றார் கடைக்காரர்.
"என்னை நினைவில்லையா...பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், நான் உங்களிடம் ஒரு ரூபாய் கேட்டேன், நீங்கள் நூறு ரூபாய் தந்தீர்கள்..அதைக்கொண்டு, ஒரு கடை வைத்து இன்று நல்லநிலையில் இருக்கிறேன்,''.
கடைக்காரர் அவனை ஆசிர்வதித்து கிளம்பினார். ஏழையின் சிரிப்பில் இறைவன்....உழைப்பே உயர்வு தரும்... 
இந்த மூணே மூணு வார்த்தை மந்திரங்கள் எல்லார் மனதிலும் இருக்கட்டுமே!

No comments:

Post a Comment