Friday, January 25, 2013

வணங்கும் முறை

நம்மில் பலரும் தெய்வங்களானாலும், ஆசான்களானாலும், தாய்தந்தையர் ஆனாலும், அனைவருக்கும் ஒரே முறையிலேயே வணக்கம் வைக்கின்றனர். மார்புக்கு நேராக கையை குவித்து சாமி தரிசனம் செய்பவர்களை அதிக அளவில் காணமுடியும். ஆனால் தெய்வங்களுக்கு, குருவிற்கு, தாய் தந்தையருக்கு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையில் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


மும்மூர்த்திகளை (சிவன், பிரம்மா, விஷ்ணு) தலைக்கு மேல் ஒரு அடிக்கு கையை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களையும், தேவர்களையும் தலைக்கு மேல் கையை உயர்த்தி வணங்குதல் வேண்டும். குரு (ஆசிரியர்) விற்கு நெற்றிக்கு நேராக கைகூப்பியும், தாய்தந்தையர் மற்றும் மன்னருக்கு வாய்க்கு நேராகவும் கையை கூப்பி வணங்குதல் முறையாகும்.


அறநெறியாளர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு மார்புக்கு நேராக கையை குவித்து வைத்து வணக்கம் தெரிவிக்க வேண்டும். தலை, இரண்டு கை மற்றும் இரு முழங்கால்கள் ஆகியவை தரையில் படும்படி வணங்கும் முறைக்கு பஞ்சாங்க வணக்கம் என்று பெயர்.


 

No comments:

Post a Comment