Monday, January 21, 2013

நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது

வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா,'' என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. கோயிலில் தீபமேற்றினால், ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றக்கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். இதை அனுமன் தன் வாழ்வில் கடைபிடித்தார். இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுக்கு அருமையான விருந்துஅளித்தார். இனியேனும், நெருப்பு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள் தானே!

No comments:

Post a Comment