Friday, January 18, 2013

கிரகணம் பிடிக்கும் போது

சூரிய கிரகணங்கள் பிடிப்பதற்கு 4 யாமத்திற்கு முன்பும், சந்திர கிரகணம் பிடிப்பதற்கு 3 யாமத்திற்கு முன்பும் சாப்பிட்டுவிட வேண்டும். சந்திர - சூரியர்கள் மருந்துகளுக்கு அதிபதிகள். அவர்களுக்கு மறைவு ஏற்பட்ட போது நம் வயிற்றில் அன்னம் இருந்தால் நோய் உண்டாகும். கிரகணம் விடாமல் இருக்கும் போதே சந்திரன் அஸ்தமனமானால், அது கிரஸ்தாஸ்தமனம் என்று பெயர்.

அன்று பகல் எல்லாம் உபவாசமிருந்து மாலை சந்திரோதயத்தைப் பார்த்த பின்பே சாப்பிட வேண்டும். சூரியனை கிரகணம் விடாதபோது சூரியன் அஸ்தமனமாகி விட்டால் இரவு ஒன்றும் உண்ணாமலிருந்து, மறுநாள் காலை ஸ்நானம் செய்து சூரிய தரிசனம் செய்த பின்பே சாப்பிட வேண்டும்.


கிரகணம் பிடிக்கும் போது, சமுத்திரக் கரையில் உள்ளவர்கள் சமுத்திர ஸ்நானம் செய்யலாம். கிரகணம் விட்ட ஸ்நானம் சமுத்திரத்தில் செய்யக்கூடாது. ஏனெனில் பிரதமையில் தான் கிரகணம் விடும். பவுர்ணமி, அமாவாசையில் தான் சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.


வீட்டுக்கு விலக்காக இருக்கும் பெண் கூட, பிறர் மொண்டுவிடும் ஜலத்தால் தான் கிரகணம் ஸ்நானம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில் எல்லா தீர்த்தமும் கங்கைக்குச் சமம். கிரகணம் முடியும் வரை ஜபம் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது. தயிர், ஊறுகாய் முதலியவைகளில் தர்ப்பையைத் துண்டித்துப் போட வேண்டும்.

No comments:

Post a Comment