Friday, January 18, 2013

பசுவைக்கண்டு மாடு என்று சொல்லாதீர்........

இந்திய சரித்திரத்தில் ரகுவம்சம் மிகப் புகழ் பெற்றது. இந்த ரகுவின் தந்தை திலீப மகாராஜன். திலீப மகாராஜன் அவனது மனைவியான சுதட்சணைக்கு வெகுநாட்கள் குழந்தைபேறு இல்லாமல் இருந்தது,. ஒருமுறை திலீப மகாராஜன் தன் மனக்குறை பற்றி வசிஷ்ட முனிவரிடம் கூறினான். அதற்கு வசிஷ்ட முனிவர், சுரபி என்னும் பசுவை நீ எதிர்கொண்ட போதும் அதனை வணங்காமலும், பிரதட்சணம் செய்யாமலும் சென்றாய்.


அதன் விளைவே உனக்கு குழந்தைப் பேறில்லை. சுரபி பசுவின் வம்சமான நந்தினியை 21 நாட்கள் தொடர்ந்து பூஜித்து வந்தால் உனக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறினார். திலீப மகாராஜனும் அவனது மனைவி சுதட்சணையும் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி நந்தினி பசுவிற்கு பூஜை செய்தனர். அப்பூஜையின் பலனாக சுதட்சணைக்கு ரகு என்ற ஆண்குழந்தை பிறந்தது. கோபூஜை புத்திரப்பேறு அளிக்கும் சக்தி வாய்ந்தது என்பதனை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.


மாடு என்று சொல்லாதீர்........


பசுவை மாடு என்று சொல்லக்கூடாது. பசு என்றே உச்சரிக்க வேண்டும். கிரகப்பிரவேச காலங்களில் மங்களத்தட்டு சீர்வரிசைகளை ஏந்தி வரும் பெண்கள், சுமங்கலிகள் எல்லாரும் 100 தடவைக்கு மேல் மாடு மாடு என்று உச்சரிக்கிறார்கள்.


ஒரு தடவை `மாடு' என்றால் 10 தடவை குச்சியால் அடித்ததற்குச் சமம். காளைக்குதான் மாடு என்று பெயர். அவன் மாடு மாதிரி உழைக்கிறான் என்ற பழஞ்சொல் உண்டு. எனவே உழைக்கின்ற எருதுதான் மாடு ஆகிறது. தெய்வரூபமான பசுவை மாடு என்று இனி சொல்ல மாட்டீர்களே...!

No comments:

Post a Comment