Sunday, January 13, 2013

மதுவிலக்கின் தேவை


ஒரு மனிதனிடம் கடவுள் 3 தவறுகளை கூறி இதில் ஒன்றை நீ இப்போதே செய்தாக வேண்டும் என்றார்,
1.
குழந்தையை கொல்ல வேண்டும்.அல்லது
2.
பெண்ணை கற்பழிக்க வேண்டும்.அல்லது
3.
மது அருந்த வேண்டும்.

கடவுளின் கட்டளையை மறுக்க முடியாமல் எதை செய்யலாம் என்று அந்த மனிதன் யோசித்தான்.

"
குழந்தையை கொல்வது பாவம்.ஆகவே அதை செய்ய கூடாது.பெண்ணை கற்பழிப்பது ஈன செயல்.அதை விட பெரிய பாவம் உலகில் இல்லை".

ஆனால் மது அருந்தினால் நாம் மட்டுமே பாதிக்கபடுவோம்.சிறிது மது அருந்துவதால் ஒன்றும் ஆகிவிடாது" என்று எண்ணி மதுவை அருந்தினான்.

மதுவை அருந்தியதால் அந்த மனிதனுக்கு போதை தலைக்கேறியது."பெண்ணை கற்பழிப்பது பாவம்" என்றவன் இப்போது போதையால் அந்த பெண்ணை கற்பழித்தான்.அதற்கு இடையூறாக இருந்த குழந்தையையும் கொன்றான்".

இந்த கதையை மகாத்மா காந்தியடிகள் சொன்னது.நல்லவர்களை மது இப்படி தான் தீயவர்களாக மாற்றுகிறது.எனவே தான் மதுவிலக்கின் தேவையை அன்றே காந்தி வலியுறுத்தினார்.

ஆனால் மதுக்கடைகள் அதிகமானதே தவிர குறையவில்லை.அதற்கான பலனாக தான இன்று பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு வருகிறது.

மதுவிலக்கு கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,மதுக்கடைகளையாவது குறைக்க வேண்டும்........!

No comments:

Post a Comment