சேந்தனார் என்ற சிவபக்தர், சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்தார்.
சிவனடியார்களை மனம் கோணாமல் உணவளிப்பார். ஒருமுறை, பலத்த மழை பெய்து விறகு நனைந்து
விட்டது. இந்த நேரத்தில், யாராவது அடியவர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு
உணவளிப்பது எப்படி என்ற கவலையில் இருந்த போது, அவர் எதிர்பார்த்தபடியே ஒரு
சிவனடியார் வந்து சேர்ந்தார். அவர் தேஜசாக, ஜடாமுடி தரித்து
காணப்பட்டார்.
தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. அரிசி சாதம் செய்வது இந்த ஈர விறகால் ஆகாது எனக்கருதிய சேந்தனாரின் மனைவி, அரிசி, உளுந்து மாவுடன், வெல்லமும், நெய்யும் கலந்து ஈர விறகை ஒருவாறாக பற்றவைத்து ஊதி, குறைந்த அளவு தீயிலேயே களி தயாரித்து விட்டார். அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி, திருவாதிரை நட்சத்திர நேரம். வந்தவர் அதைச் சாப்பிட்டு விட்டு, ""தினமும் தயிர்ச்சாதமும், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு, தாங்கள் அளித்த இந்த இனிய களி பிரமாதமாக இருந்தது,'' என பாராட்டினார். ஒரு எளிய உணவை தேனினும் இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர் தம்பதியர்.
மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரை தரிசிக்க சென்றனர். நடையெல்லாம் தாங்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜப் பெருமானின் வாயில் களி சிறிதளவு ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது நடராஜப் பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர் உடல் புல்லரிக்க, அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.
இதனால் தான் "திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்ற சுலவடை ஏற்பட்டது. அன்று நடராஜருக்கு களி நிவேதனம் செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment