Friday, January 18, 2013

பசுக்களின் மடிக்காம்புகள்

பூமியிலுள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும், புண்ணிய தலங்களில் இருந்தும் அழகும் புனிதமும் பரிசுத்தமும் உள்ள வஸ்துகளிலுள்ள தேஜஸை (ஒளியை) எடுத்து இறைவன் பசுவைப் படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.பசுவை ஒருமுறை பிரதட்சனம் செய்தால் மூன்று உலகங்களையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.

``காவோ வை ஸாவோ தேவதா'' இந்த சுலோகத்தின் பொருள் என்னவெனில், பசுவின் உடலில் வால் நுனியிலிருந்து கொம்பின் நுனிவரை ஒவ்வொரு தெய்வம் வாசம் செய்கிறது என்பதாகும். அதாவது பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.


எனவேதான் பசுவினை எங்கு கண்டாலும் அதனை தொட்டு வணங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் உடலில் எந்தப் பகுதியை தொட்டு வணங்கினாலும் நமக்கு தெய்வத்தின் அருள் கிட்டும். காரணம் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களுமே வாசம் செய்கின்றனர்.


சிரம்(தலை) - சிவபெருமான்

நெற்றி - சிவசக்தி

வலது கொம்பு - கங்கை

இடது கொம்பு - யமுனை

கொம்புகளின் நுனி- காவிரி,கோதாவரி, முதலிய புண்ணிய நதிகள், சராசை உயிர் வர்க்கங்கள்

கொம்பின் அடியில்- பிரம்மன், திருமால்

மூக்கின் நுனி- குமரக்கடவுள்

மூக்கின் உள்ளே- விதயாதரர்கள்

இருகாதுகளின் நடுவில்- அஸ்வினிதேவர்

இருகண்கள்- சூரியர்,

சந்திரர் வாய்- சர்ப்பாசுரர்கள்

பற்கள்- வாயுதேவர் நாக்கு- வருணதேவர்

நெஞ்சு- கலைமகள்

கழுத்து- இந்திரன்

மணித்தலம்- எமனும் இயக்கங்களும்

உதடு- உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்

முரிப்பு-(கொண்டை) - பன்னிரு ஆதித்யர்கள்(சூரியர்கள்)

மார்பு- சாத்திய தேவர்கள் வயிறு - பூமிதேவி

கால்கள்- அனிலன் என்னும் வாயு தேவன்

முழந்தாள்- மருத்து தேவர்

குளம்பு- தேவர்கள்

குளம்பின் நுனி- நாகர்கள்

குளம்பின் நடுவில்- கந்தர்வர்கள்

குளம்பின் மேல்பகுதி- அரம்பையர்

முதுகு- உருத்திரர்

யோனி- சப்தமாதர்(ஏழு கன்னியர்)

குதம்- இலட்சுமி

முன்கால்- பிரம்மா

பின்கால்- உருத்திரன் தன் பரிவாரங்களுடன்

பால்மடி- ஏழு சமுத்திரங்கள்

சந்திகள் - அஷ்ட வசுக்கள்

அரைப்பரப்பில்- பிதிர் தேவதை

வால்முடி -ஆத்திகன்

உரோமம்- மகாமுனிவர்கள்

எல்லா அவயங்கள்- கற்புடைய மங்கையர்

சிறுநீர்- ஆகாய கங்கை

சாணம்-யமுனை

சடதாக்கினி-காருக பத்தியம்

வாயில் - சர்ப்பரசர்கள்

இதயம்- ஆகவணியம்

முகம்- தட்சரைக்கினியம்

எலும்பு, சுக்கிலம்- யாகத்தொழில் அனைத்தும்


பசுக்களின் மடிக்காம்புகள் நான்கும் முறையே சுவாஹாரம், சுவதாஹாரம். வஷ்டஹாரம், ஷந்தாஹாரம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை முறையே தேவர், பித்ருக்கள், பூதேசுவரர், மனுஷர் ஆகியோர் பூஜித்து வரவேண்டும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment