காஞ்சிப் பெரியவர் ஒருதடவை காசிப் பயணம் மேற்கொண்டார். சாமான்களை ஒரு வண்டியில்
ஏற்றிப் போனார்கள். வண்டியை ஒரு முஸ்லிம் பையன் ஓட்டினான். காஞ்சி பெரியவர் அவனிடம்
பல்வேறு விஷயங்களையும் பேசிக் கொண்டே வந்தார். அப்போது அந்த முஸ்லிம் சிறுவன்,
காஞ்சி பெரியவரை பார்த்து, ``இப்போது யாத்திரையாக `எங்கே போகிறீர்கள்' என்று
கேட்டான்.
`காசிக்கு' என்று இவர் கூறியதும் ``ஓகோ, காசி ராமேச்சுரமா'' என்று
சொல்லியிருக்கிறான். வேறு யாராகவும் இருந்தால் `இவன் சிறியவன், வேறு மதத்தினன்,
இவனுக்குக் காசி வேறு ராமேச்சுவரம் வேறு என்று தெரியவில்லையே' என்று நினைத்துக்
கொள்வார்கள். அணுவிலும் அண்டத்திலும் ஆண்டவனையே எண்ணிப் பார்க்கும் பெரியவர் அப்படி
நினைக்காமல் வேறு கோணத்தில் நோக்கியிருக்கிறார்.
இவனுக்குக் கூட காசி என்றதும் ராமேஸ்வரத்தை இணைக்க வேண்டும் என்று
தெரிந்திருக்கிறதே - ராமேச்சுவரத்தின் பெருமை இப்படிப்பட்டவர்களிடம் கூடவா
பரவியிருக்கிறது' என்று தான் பெரியவர் நினைத்திதார்; வியந்தார்
No comments:
Post a Comment