Monday, January 21, 2013

கல்யாணம் போன்ற சுபவிஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?

* கல்யாணம் போன்ற சுபவிஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தை மங்களம் பொருந்தியதாக அலங்கரிக்க வேண்டும். மாவிலை, தென்னங்குருத்து தோரணம், வாழைமரம், மாக்கோலத்தை மங்களத்தின் அடையாளங்களாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக எல்லோரும் விரும்புவது நம் குலம் தழைக்க வேண்டும் என்பதையே. பூவும் தாருமாக இருக்கும் வாழையின் அடியில் கன்றுகள் தோன்றி தழைக்கும். அதுபோல நம் வம்சமும் விருத்தியாக வேண்டும் என்று செய்கிறோம்.


* கனவில் குரங்கு அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது. இது எதைக் குறிக்கிறது?
கனவு என்பது ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்களின் வெளிப்பாடு தான். டிஸ்கவரி சேனலில் பார்க்கும் விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து பாதிக்கின்றதோ என்னவோ! பயப்படுவதற்கு ஒன்றுமில்லை

No comments:

Post a Comment