Friday, January 18, 2013

பிரதோஷ காலத்தில் பசுவிற்கு இடம்

சிவன் கோவில்களில் நந்தி வழிபாடு பிரதோஷ காலத்தில் நடைபெறும். அச்சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்கள் பதி, பசு, பால் என்னும் மூன்று பொருட்கள் பற்றி பேசுவார்கள். பதி என்பது இறைவனை குறிக்கும். பசு என்றால் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகளைக் குறிக்கும் பதியாகிய ஈசனை சந்தித் தபடியே பசுக்களாகிய உயிர்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என்பது சைவானுட்டான விதி.

இதைக்குறிப்பிடவே நந்தி தேவர் சிலை சிவலிங்கத்திருமேனிக்கு நேராக இடம் பெற்றுள்ளது. பிரதோஷ காலங்களில் மன்னர் காலத்து இசை வேந்தர்கள் நந்தி தேவர் ஆனந்த நர்த்தனமாட வருஷ்ப தாளத்தை மத்தளத்தில் வாசித்து அதன் பதத்தைப்பாடினர். அப்போது அதில் பிரியம் கொண்ட கோமாதா அங்கு வரும் என்பது சொல் வழக்கம்.

காலையில் விழித்த உடன்.......

ஒருவர் காலையில் கண் விழித்த உடன் மங்கலப் பொருட்களை முதலில் காண்ப தால் அந்நாளில் அதற்குரிய பலன் கிடைத்துவிடும். தீபம், தங்கம், தாமரை, மலர், கண்ணாடி, புகை யில்லாத நெருப்பு, சந்தனம், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்த மாலை, வலதுகை, மனைவி, மிருதங்கம், திருமண், கோவில் கோபுரம் ஆகியவை.

ஆனால் இவை அனைத்தையும் விட ஒரு பசுவை நேரில் கண்டுவிட்டால் அன்றைய தினம் முழுவதும் அதிஷ்டமான நாளாக இருக்கும். சூரிய-சந்திர- கோ தரிசனம்: ஒரு குழந்தை பிறந்த மூன்றாவது மாதத் தில் சுப வேளையில் சூரி யனைக் காட்ட வேண்டும். நான்காவது மாதத்தில் சாதம் கொடுத்தல் என்று முதல் சாதம் ஊட்ட வேண்டும்.

அதே நாளில் சுப முகூர்த்த வேளையில் முருகனையும், சந்திரனையும் பூஜித்த பின் பசு (கோ) தரிசனமும் செய்வ தால் குழந்தை சான்றோனாக வரும் என்பது சடங்கில் ஒரு விதி. இது தான் சூரிய-சந்திர- கோ தரிசனம்.

அக்னி புராணத்தில்........

திருமண காலத்தில் பெண்ணை மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது தரவேண்டியவை குதிரை, சுவர்ணம், எள் யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம் சிவப்பு நிறப்பசுக்கள். இவை தசமகா தானம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

பலவகைப் பொருட்களால் செய்யப்பட்ட பசுவடி வங்களைத் தருவது தேனுதானம் ஆகிறது. பவிஷ்ய புராணத்தில் யக்ஞ், யாகச் சடங்குகளின் போது ஒரு படித்த ஏழை வேதவானுக்கு கன்றுடன் அளிக்கும் பசு தானம் முக்தி அளிக்கும் என்று உள்ளது.

பசு பூஜை செய்த திருத்தலங்கள்.........

திரு ஆமாத்தூர், ஆவூர், பெண்ணாடம் கருவூர் (ஆநிலை) ஆடுதுறை திருக்கொண்டீச்சுரம், பட்டீச்சுரம் பசுக்களின் மாமிசத்தை உண்பவனும், அதற்காக பசுவைக்கொல்பவனின், ஏழு தலைமுறைகளுக்கும் பாவங்கள் விரட்டிக்கொண்டிக்கும் நிம்மதியே இருக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது.

கோபூஜையே தீபாவளியாய்...!

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பசுக்களை வழிபடும் நாளே தீபாவளி என்கிறார்கள். அன்று பசுவையும், எருதுகளையும், கன்றுகளையும் குளிப்பாட்டி மாலை, பொட்டு வைத்து அலங்கரித்து வழிபடுவார்கள். இதைச் செய்வதால் குபேர சம்பத்து கிடைக்கும் என்கிறார்கள்.

பசுபதீஸ்வரங்கள்............

பந்தனை நல்லூர் காட்மாண்டு, கரூரிலுள்ள திருவாநிலை திருக்கொண்டீஸ்வரம்,ஆவூர் ஆகியவை பசு பதிஸ்வரங்களாகும். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கங்களுக்கு பசு பால் சொரிந்த திருத்தலங்கள் பசுபதிஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றன.

பசுவின் வாழ்க்கை உணர்த்தும் தத்துவம்...........

தியாகத்தின் சின்னமாக பசு கருதப்படுகிறது. நாம் பயன்படுத்தாத புல், உமிவைக் கோலையும் சாப்பிட்டு விட்டு சத்தான பாலை தருகிறது. பசுவின் பால் பிள்ளை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்துகிற எளிய சத்தான உணவாகிறது.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது. என்னவெனில், பிறருக்கு பயன்படுகிற வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அமைதியான அடக்கமான வாழ்வு வாழ்தல் வேண்டும். மனித சமுதாயத்திடம் நாம் கேட்பது குறைவாகவும் கொடுப்பது நிறைவுடையதாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு பசுவின் வாழ்நாள் நமக்கு உணர்த்துகிறது. தன்னையே அர்ப்பணித்து மனித இனத்துக்கு உதவுவதால் கோமாதா என பசு வணங்கப்படுகிறது.

தேனுமுத்திரை என்னும் கோமாதா முத்திரை.........

கோவில்களில் யாகங்கள் கலச பூஜைகள் செய்யும் போது சிவாகம பூஜாக்கிரமங்களின்படி முத்திரைகள் 74 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குருவந்தன முத்திரைகளுக்கு அடுத்ததாக அர்க்யஸ்தாபன முத்திரைப் பிரிவில் (நீர்விட்டபடி கைகளால் காட்டுதல்) நான்காவதாக சொல்லப்படுவதே தேனு முத்திரை என்னும் காமதேனு முத்திரை.

இரு கைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு சுண்டு விரல்களைப் பவித்ர விரல்களுடனும் ஆள்காட்டி விரல்களை நடு விரல்களுடன் ஒட்டிக்கீழ்நோக்கிப்பிடிக்க வேண்டும். காமதேனு முத்திரையைப் பிடிக்க கற்றுக்கொண்டால் கைகளில் காசு பணம் நிறையச் சேரும். இது குபேரனது முத்திரைக்கு சமமானது.

No comments:

Post a Comment