எந்த ஒரு உயிரினத்துக்கும் இல்லாத சிறப்பு பசுவுக்கு மட்டும் எப்படி வருகிறது
என்றால் மனிதனைப்போல் `அம்மா' என்று அழைத்து தாய் அன்பை காட்டுகிறது. ஒரு பசுவை
ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும், பார்ப்பவருக்கு
பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.
பசு எங்கே இருக்கிறதோ அங்கே மகாலட்சுமியின் வாசம் இருந்து கொண்டிருக்கும்
என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. வேதங்களில் ரிக், யஜீர், சாம வேதங்கள் ஸ்ரீசௌபாக்ய
லட்சுமி என்றே பசுவை வர்ணிக்கின்றன. செல்வவளம் நிறைந்து வாழும் ஒருவரை இந்த உலக
மக்கள் பால், பாக்கியம் நிறைந்தவர் என்றே வர்ணிக்கிறார்கள்.
தனது ரத்தத்தை முறித்துக்கொண்டு மனித இனம் வாழ ஐவகைப்பொருட்களை பால், தயிர்,
நெய், கோமயம்,தோல் உள்பட கொடுத்து தன்னிகரற்ற தாய் போல் விளங்கும் பசு தான்
எடுத்துக்கொள்வது புற்கள் மற்றும் ஒதுங்கிய பொருட்களால் செய்யப்படுகிற தீவனங்கள்
மற்றும் ஒதுக்கப்பட்ட அரிசிக்குறுனை மற்றும் தவிடு பொடிகளை மட்டுமே.
இதிலிருந்து, ஒதுக்கப்படும் கழிதல் களையும் உபயோகிக்கலாம் என்ற தத்துவத்தை அது
கூறுகிறது. முரட்டு உருவங்கள் உடைய விலங்கினங்களுக்கு இடையே கனிவான பால் சுரக்கிற,
தெய்வத்தன்மை மிகுந்த தாய் பசுதான் என்று உறுதியாக மனிதன் கூறுவதும் பாராட்டுவதும்
பசுவுக்கு மட்டும் தான் உரித்தாகிறது.
இந்த கருத்தை ஈரேழு பதினான்கு உலகமும் ஒத்துக்கொள்வதாக ஆன்மிக உலகோர்
சொல்கின்றனர். கவ் (cow) - என்ற ஆங்கில பதத்திற்கு cares Over all Works and
Winnings என்று பொருளைத் தாங்கி நிற்கிறது. அதன் பொருள், பசுவானது நம் பணிகளை
தெய்வமாக நின்று கவனித்து எல்லா இடங்களிலும் வெற்றி கொள்ள வைக்கிறது.
கோ என்றால் உலகம், மாதா என்றால் தாய் மற்ற மதத்தவரும் போற்றி அலங்காரம் செய்து
உலாவரச் செய்து கோல்டு கௌ, பிக்மதர், மதர் ஆப் அனிமல்ஸ் என்ற பாராட்டைப்
பெற்றுள்ளது பசுவே. தேவாலயம், திறப்பு, குடமுழக்கு பெருஞ்சாந்தி பெரு விழா,
மன்னர்கள் நடத்தும் யாக கர்மங்களுக்கு முன், முதலில் மரியாதை செய்யப்படுவது (கோ
பூஜை செய்து) கோமாதாவுக்கே....! அதன் பொருட்டே விலங்காய் பிறந்து தீவினை களைந்து
நலம் தரும் தெய்வமாய் ஒரு பசு உயர்ந்து நிற்கிறது.
No comments:
Post a Comment