Tuesday, March 17, 2015

லிங்க வழிபாடு

லிங்க வழிபாடு
---------------
அருவ உருவ வழிபாட்டு முறை தான் லிங்க
வழிபாட்டின் கோட்பாடு.அருவம் என்றால்
"உருவம் இல்லாத "என்று பொருள். ,--லிங்கம்
குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம்.
உருவம் ஏதோ ஒரு வடிவம்
உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கி
ன்றது.எனவே உருவம் உள்ளதும் ,உருவம்
அற்றதும் கலந்ததுவே சிவலிங்கம்
அல்லது லிங்கம்.தெரியாதவர்கள் பழம்தமிழ்
அகராதிகளை கொஞ்சம் புரட்டியும்
பார்க்கலாம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி
யாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா?
அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது.
மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்
செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப்
பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய்
இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு,
ஒளிஇருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற
இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா??
இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர்.
இந்த இருமை வகையான மாயையில்
இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம்
கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம்
நமக்கு உணர்த்துகின்றது.
ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட
ஒரு சமய வரலாற்று மகாநாட்டில்
ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால்
லிங்க வழிபாடு,
பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப்
பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த
ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில்
அதை ஆணித்தரமாய்
மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய்
புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிர
ுந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள்
காட்டி எடுத்துரைத்து அதை மறுத்தார்.
ஆகமவிதிகளின் படி சிவனின் வடிவமானது,
பத்மபீடம் அல்லது சமவடிவிலான
நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும்
எடுத்துக் காட்டினார். மேலும் பழைய
காலங்களிலேயே லிங்க
வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம்
பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக்
காட்டினார் விவேகானந்தர்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்
வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர்
கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள்
இருந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை .
அது மட்டுமல்லாமால் ஆதி காலமனிதன்
வழிபாட்டு முறை லிங்க
வடிவிலே இருந்திருக்கிறது கொஞ்சம்
மண்ணை ஈரபடுத்தி அதை லிங்கமாக
வடிவமைத்தே முதலில்
வழிபாட்டு முறை ஆரம்பித்திருக்கிறார்கள்
என்பதற்கு தொல்லியல் துறை பல
சான்றுகளை அளித்திருக்கிறது.
கல்லில் கடவுள் ரூபத்தை வரைய
அல்லது செதுக்க தெரியாத ஆதிகால
வழிபாட்டில் உருவாக்க பட்டவைதான் இந்த
லிங்க வழிபாடு.இப்போது கூட கிராமங்களில்
நடக்கும் குலதெய்வ வழிபாடுகளில் இஷ்ட
தெய்வத்தை மக்கள் லிங்க வடிவில்
வைத்தே வழிபடுகிறார்கள்.
லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற
ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத்
தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும்.
நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப்
படுத்தப் பட்ட இந்த லிங்க
வடிவானது அனைத்துச் சமயங்களையும்
கடந்த ஓர் அற்புத தத்துவமாகும்.
தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில்
சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின்
வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத்
தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய
பிரம்மாண்டமான பேராற்றல்
இயற்கையிலேயே லிங்க
வடிவத்திற்கு உள்ளது என அறிவியல்
வல்லுநர்களும் கூறுகின்றனர் . அமெரிக்கக்
கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத்
துறை திறனாய்வாளர் John Stephen என்பவர்
இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM
என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருக்கிறார் .
நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக
நாடுகளிலும் அணுமின் நிலையங்களின்
கொதிகலன்கள் லிங்க
வடிவிலேயே அமைந்துள்ளன.
எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர்
அளப்பரிய சக்தியின் அல்லது இறைத்
தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும்
மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும்
சொந்தம் எனக் கூறமுடியாது.
அணு உலைகள் மட்டும் அல்ல பல இஸ்லாமிய
பள்ளிவாசல்களின் மேற்பரப்பும் இதே லிங்க
அமைப்பில் உள்ளன.
தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள்
வைணவத்திருத்தலங்களிலே கூட
சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக்
குறிப்பிட்டுள்ளார்கள். அரியலூர், காரமடை,
மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற
தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக
வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத்
தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள
அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில்
லிங்கம் உள்ளது மிக பெரிய சான்றாக கொள்ள
முடியும்.
இதிலிருந்தே தெரிகிறது லிங்கம்
என்பது ஒரு அருவம் அதாவது உருவமற்ற
நிலை.

No comments:

Post a Comment