Thursday, March 19, 2015

அனைத்தையும் பிரதிபலன் பார்த்தே செய்து பழகி விட்டோம்,


அனைத்தையும் பிரதிபலன் பார்த்தே செய்து பழகி விட்டோம்,
ஆலயம் வருகிறாயா? என அழைத்தால், என்ன கிடைக்கும்? என்ற கேள்வி.......
நாமஜபம் செய்வோமா? எனக் கேட்டால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி...............
பாராயணம் செய்வோமா? எனக் கேட்டால் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி..........
சத்சங்கம் சென்று வருவோமா? என்று அழைத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி............
உழவாரப்பணி செய்ய அழைத்தால் என்ன லாபம் எனக்கு என்ற கேள்வி..........
ஆர்.எஸ்.எஸ். ஷாகா வருகிறாயா? என்று கேட்டால் எனக்கு என்ன லாபம் என்ற கேள்வி..............
ஆமா, அனைத்திலும் லாபம் பார்க்கும், உலகாயாதப் பொருட்களின் வரவை எதிர்நோக்கியே செய்யும் நீ, மேலுள்ளவை மூலம் உலகாயாத நோக்கில் ஏதாவது உனக்கு கிடைத்தால் எப்போதும் உன்னால் அதை உன்னுடன் வைத்திருக்க முடியுமா? அட, மேலுள்ளவை மூலம் ஏதாவது உலகப் பொருட்கள் கிடைத்தாலும் அதை உன்னுடன் எடுத்து செல்வாயோ?
எதையும் எடுத்து செல்லாத நீ எதற்கு அனைத்திலும் எதையாவது எதிர்பார்த்து நிற்கிறாய்? எதுவுமே எடுத்து செல்ல இயலாத நிலையில் வாழும் உனக்கு இங்கு உலகப் பொருட்கள் சேர்ந்தால் என்ன? சேராவிட்டால் என்ன? பாகவதம் உபாசனை கேட்க சென்றால் உனக்கு என்ன கிடைக்கும்? என்று கணக்கு பார்க்கும் நீ, அதன் மூலம் ஏதாவது கிடைத்தால் அதையாவது எடுத்து செல்வாயா? இல்லையே, அதனால் "உள்ள சுகம்" கிடைக்குமா? என்று பார்த்தும் சில காரியங்களையாவது செய்.

No comments:

Post a Comment