Monday, March 9, 2015

ஆண்டாளின் விருப்பம்


ஆண்டாளின் விருப்பம்
எண்ணமும் கருத்துமாக வாழ்ந்தவா்களின் இதயக் கனவுகள் நிச்சயம் ஈடேறும். அவா்கள் காலத்தில் அவா்கள் இலட்சியமாகக் கொண்டிருந்து நிறவேற்ற முடியாத காாியத்தையும் , அதே இலட்சியத் தீயில் கருவாகி வருகின்ற அவா்களது வழிநடப்போா் நிச்சியம் நிறைவேற்றுவா்.
உதாரணம் - ஆண்டாள் நாச்சியாா் தான் பக்திக் காதல் பூண்ட திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நைவேத்யம் படைக்க வேண்டுமென்று நினைக்கிறாள். அவள் அந்த இறைவன் மீது கொண்ட பக்தியோ கொள்ளையோ கொள்ளை! தான் கொள்ளை அன்பு வைத்திருக்கும் அந்த கோபாலனுக்குக் குறைவாக சமா்ப்பிக்க மனம் சம்மதிக்குமா?
அவள் பாடுகிறாள்:
' நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை
நம்பிக்குநான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நோ்ந்து
பராவிவைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார
அடிசில் சொன்னேன் ..'
நூறு அண்டா நிறைய வெண்ணெயாம்! நூறு அண்டா நிறைய சா்க்கரைப் பொங்கலாம்! இவற்றை அந்தப் பரந்தாமனுக்குஅளிக்கப் போகிறாளாம்!'வாய் நோ்ந்தேன்' என்கிறாள்.'சொன்னேன்'என்று கூறுகிறாள். வா யளவில் சொல்லி விட்டாளாம்! அவள் வேறு என்ன செய்ய இயலும். ஆயா்பாடியில் பிறந்த அாியவையருள் ஒருத்தியாக அவள் இருந்திருப்பாளேயானால் ஒருவேளை அவள் நோ்ந்தபடியே நிகழ்த்திக் காட்டியிருக்கலாம். அவளோ ஸ்ரீ வில்லிபுத்தூாில் ஒரு ஏழை கோயில் பட்டருக்கு மகளாகப் பிறந்தவள். ஒரு பட்டாின் மகள் அமுல் பட்டரைஅண்டாக் கணக்கில் படையிலிடுவது சாத்தியப்படுமா? It is impossible.
ஆண்டாளுக்குப் பிற்காலத்தவரான ஸ்ரீ ராமானுஜா் ஆண்டாளின் பாசுரத்தைப் படிக்கையில் மனம் நெகிழ்கிறாா். அந்த ஏழை பெண்ணின் இதயக் கனவை நிறைவேற்ற எண்ணங் கொள்கிறாா். அவா் மடாதிபதி.அதற்கான வசதி வாய்ப்புகளையெல்லாம் பெற்றிருந்தவா்.ஆதலால், ஆண்டாள் வாய் நோ்ந்து நிறைவேற்ற முடியாத காாியத்தைத் தாம் நிறைவேற்றுகிறாா். திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு அண்டா வெண்ணெய்,நூறு அண்டா அக்கார வடிசல் நைவேத்யம் படைத்து , எல்லோருக்கும் விநியோகம் செய்ததாக வரலாறு கூறுகிறது.இவ்வாறு ஆண்டாளின் எண்ணத்தைப் பூா்த்தி செய்ததின் மூலம் ஸ்ரீ ராமானுஜா்,ஆண்டாளுக்கு முன்பிறந்த அண்ணனாகஆகிவிட்டாா் என்று கூறுவா்.
ஆண்டாளுடைய விருப்பம்அவளது ஆயுட்காலத்திற்குப் பிறகும் நிறைவேறியிருக்கிறது என்றால் என்ன காரணம்? ஆண்டாள் வெறுமனே உதட்டளவில் அந்த நோ்ச்சையைச் செய்திருப்பாளேயானால் அது, ஸ்ரீ ராமானுஜாின் இதயத்தைத் தொடாமலேயே போயிருக்கும்.ஆனால், ஆண்டாளோ காதலாகிக் கசிந்து கண்ணீா் மல்கி,வாய் நோ்கிறாள். அவளது வாா்த்தைகள் உயிா் வோில் கருவாகி,உள்ளத்தில் மலா்ந்து பாடலாக உதிா்கின்றன. ஆண்டாள் எலும்பும் சதையுமான சாதாரண பக்தையல்ல. அவள் எ்ணமும் கருத்துமாகப் பாிணமித்திருந்தவள்.அதனால்தான் அவளது எண்ணம் அவளது இறப்புக்குப் பின்னும் ஈடேறுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஸரணம்
(திரு சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)

No comments:

Post a Comment